Wednesday 17 November 2021

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’ 


 

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 

இனிதாவ தெங்கும் காணோம்" 

எனக் கூறிய பாரதியார், சிறுவயது முதலே கவிப்புலமை பெற்று விளங்கியவர். தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ள பாரதியார் தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை  ஊட்டினார்.  

அவரது படைப்புகள், புரட்சி வரிகள் தனி மனித வாழ்வில் எழுச்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

பாரதியார் எழுதிய பாடல்கள், கவிதைகள் மற்றும் புதிய ஆத்திசூடி போன்ற காலத்தால் அழியாத படைப்புகளில் உள்ள ஒருசில புரட்சி வரிகளுக்கு  சிறுகதைகள் வடிவில் விளக்கமாக எடுத்துக் கூறும் வகையில் ‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’ என்ற  நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துரை. சக்திவேல்

நூலாசிரியர்

Tuesday 16 November 2021

பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சி கதைகள்

 துரை. சக்திவேல் எழுதிய ‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சி கதைகள்’’



புத்தக வெளியீட்டு விழா




தன்னம்பிக்கை

 காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஆட்டோவை துடைத்துக் கொண்டிருந்தார் முனுசாமி.

அப்போது வீட்டுக்குள் இருந்து தவழ்ந்தபடி வெளியே வந்த அவனது மகள் தேன்மொழி, அப்பா இட்லி ரெடி ஆயிடுச்சு சாப்பிட வாங்க என்று அழைத்தாள்.

தேன் மொழிக்கு இளம்பிள்ளை வாதத்தால் சிறுவயதில் கால் நடக்க முடியாமல் போனது.

நடக்க முடியாமல் போனாலும்... தேன்மொழி நம்பிக்கையை இழக்கவில்லை. பள்ளிப் படிப்பையும் பட்டப்படிப்பையும் முடித்தாள்.

ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

அதற்கு அவளது தந்தை முனுசாமியும் ஊக்கம் அளித்தார்.

ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தனது மகளின் கனவை நனவாக்க துடித்தார்.

தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி பள்ளியில் அவளை சேர்த்து விட்டார்.

இரண்டு முறை எழுதியும் அதில் தேன்மொழி குறைந்த அளவே மதிப்பெண் எடுத்தாள்.

ஆனால் அவள் தன் நம்பிக்கையை கைவிடவில்லை.

எப்படியாவது படித்து ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற நம்பிக்கையுடன் படித்து வந்தாள்.

முனுசாமி ஆட்டோவை துடைத்து வழக்கம் போல் சவாரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது வீட்டு வாசலில் புல்லட் வண்டியின் சத்தம் கேட்டது.

திரும்பி பார்த்த முனுசாமி,

அண்ணே.... வணக்கம் என்று பெரிய கும்பிடு போட்டான்.

வண்டியில் வெள்ளை சட்டை, வெள்ளைவேட்டி கட்டிய மாரி வந்து நின்றான்.

‘‘அண்ணே சொல்லுங்க’’ என்ற முனுசாமியிடம்....

என்ன முனுசாமி வயசுக்கு வந்த பொம்பள பிள்ளையை எவ்வளவு காலம் வீட்ல் வைச்சிருப்ப....

அதுவும் கால் நடக்க முடியாத பொண்ண வச்சுக்கிட்டு எவ்வளவு காலம் கஷ்டப்படப் போற....

காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி உன் கடமையை முடிச்சுடு என்றார் மாரி.

அண்ணே... அவ ‘‘ஐ.ஏ.எஸ். படிக்கனும் சொல்றாள்’’ என்று முனுசாமி கூற....

ஏண்டா... பொம்பள பிள்ளைக்கு படிப்பு எதுக்கு.... அதுவும் நடக்கா முடியாத பொண்ணு படிச்சு என்ன கிழிக்கப் போறாளாம்...

டிகிரி முடிச்சிடுச்சுட்டு சும்மா தானே இருக்கா... படிச்சது போதும்... கால காலத்துல கல்யாணத்தை பண்ணிடு...

நம்ம பையன் ரவி இருக்கான்ல.... அதாண்டா.... ஆட்டோ ஓட்டுரானே அவன் தான்....

பேசாம அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம்.... அவன் நல்ல பையன். நான் சொன்னா கேப்பான்....

நல்லா யோசிச்சு சொல்லு என்று ரவி கூறினார்.

‘‘அண்ணே வீட்டில் ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்றேன்’’.... என்று முனுசாமி பதில் சொல்ல...

சரி சீக்கிரம் நல்ல முடிவா சொல்லு என்று கூறிய ரவி தனது புல்லட் வண்டியில் அங்கிருந்து கிளம்பினான்.

வீட்டு வாசலில் நடந்த விஷயத்தை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழியின் கண்களில் கண்ணீர் பெருகியது.

இதைப் பார்த்த முனுசாமி....

ஏம்புள்ள இதுக்கு போய் அழுகுற... இப்ப என்ன நடத்துடுச்சு.... அழுகாமா வீட்டுக்குள்ள வா....என்று தனது மகளை சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தான் முனுசாமி...

அப்பா.... நான் ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டர் ஆகனும். அதுதான் என் கனவு. அது உங்களுக்கு தெரியும்...

தயவு செய்து என்னை படிக்க வைங்க. கண்டிப்பா இந்த முறை பாஸ் ஆயிடுவேன் என்று கண்ணீர் விட்டாள்.

வீட்டில் பொம்பளப் பிள்ளை இருந்தா.... சீக்கரம் கல்யாணம் பண்ணி வைச்சிடுன்னு எல்லாரும் சொல்லுவாங்க.... அதை தான் ரவி அண்ணனும் சொன்னாற...

அதுக்காக உடனே கல்யாணம் பண்ணி வைக்கவா போறோம்...

நான் எவ்வளவு கஷ்டப்பட்டாவது உன்னை ஐ.ஏ.எஸ். படிக்க வைக்கிறேன்... அதுக்கு தான் தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைக்கிறேன்....

நீ கண்டிப்பா ஐ.ஏ.எஸ். படிச்சு கலெக்டர் ஆவது உறுதி....

உனக்கு உன்மேல் இருக்கும் நம்பிக்கையைவிட உன்மீது எனக்கு நம்பிக்கை அதிகம்இருக்கு.

அதனால்.... யாரு சொல்வதையும் கேட்காமா.... உன் படிப்பைப் பாரு.... என்று கூறினான் முனுசாமி.

தனது மனைவி கொண்டு வந்த இட்லியை சாப்பிட்டுவிட்டு சவாரிக்கு கிளம்பிய முனுசாமி, தனது மகள் தேன்மொழியையும் வழக்கம் போல் அவள் படிக்கும் தனியார் பயிற்சி பள்ளியில் இறக்கி விட்டு சென்றான்.

தேன்மொழி தனது சூழ்நிலையை உணர்ந்து.... அதே வெறியுடன் தனது படிப்பில் முழு கவனத்தை செலுத்தினாள்.

மீண்டும் முதல்நிலை தேர்வு எழுதினான்.

அந்த தேர்வில் மாநிலத்திலேயே அவள் தான் முதல் மாணவியாக தேர்வு ஆனாள்.

தேன்மொழியின் தன்னம்பிக்கை கைகொடுத்தது.

முனுசாமியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு சென்றாள். பயிற்சி கலெக்டராகி பின்னர் துணை கலெக்டராக பதவியேற்றாள்.

தேன்மொழியை அனைவரும் பாராட்டினார்கள்.

அவளை பாராட்டியவர்களில் முதல் ஆள் அந்த ரவி தான் என்பது தேன்மொழியைப் பெருமைப்பட வைத்தது.

கால் இல்லாததால் தேன்மொழியால் எழுந்து நிற்க முடியவில்லை.

ஆனால் தன்னம்பிக்கை என்ற கால்களினால் வாழ்க்கையில் அவள் நிமிர்ந்து நின்றாள்.         

பாரதியின் புரட்சி வரிகள்

‘‘பாரதியின் புரட்சி வரிகளுக்கு எழுச்சிக் கதைகள்’’    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்  இனிதாவ தெங்கும் காணோம்"  எனக் கூறிய பாரதிய...